செவ்வாய், 27 ஜனவரி, 2015

திருக்கடவூர் திருமெய்ஞான ஒளியே போற்றி!

அய்யன் தவத்திரு ஓதிமலை சிவகுமார் ஐயாவுடன் சிறிபதி, மூர்த்தி, ஆறுமுகம்  மற்றும் கடையேன் ஓதியடிமையும் மேற்படி அருள்தேடும் பயணத்தை துவக்கி தில்லைக்கு செல்லும் நிலையில் திருநள்ளாறு திருவிடங்கனை கண்ணாரக்கண்டோம், அங்கிருந்து திருக்கடையூர் பின்புலத்தின் அருகில் திருவருள்கொண்டு அமைந்திருக்கும் திருமெய்ஞான ஒளி நிலையைக் கண்டோம், அங்கு தன் 3ஆம் அகவையில் இவ்வாலயத்தை அடைந்து திருத்தொண்டாற்றி அருளும் திருமெய்ஞான அடியார் [தற்போது 85 வயதுக்கும் மேல் ] ஒருவர் அங்குவரும் அன்பர்நிலைக்கு ஏற்ப அய்யன் மீது பதிகம்பாடி திருவிளக்கேற்றவைத்து அருளும் நிலை நெஞ்சை உருகவைக்கிறது.   இத்திருமெய்ஞான கோயிலிலிருந்துதான் பக்கத்தில் உள்ள திருக்கடையூர் பெருமானுக்கு  திருமுழுக்கு செய்ய நீர் இன்றும் கொண்டு செல்வது வியப்பாக உள்ளது,  விரிந்து பரந்த இக்கோயில் அய்யனால் மிகவும் தூய்மையாக வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அய்யனே.  அய்யன் கடவூர் மயானம் அமர்ந்த சிவனே என்று பதிகம் பாடி அருளியது  உள்ளதை உருக்கி நெகிழ வைத்தது மறக்கமுடியாத நாளாக அமைந்தது அய்யனே - உண்மையான திருக்கடையூர் திருமெய்ஞாணமே என்றே புலப்படுகிறது, அய்யன் சிவன்  இங்கு மயானத்தில் அருளாற்றும் நிலையில் உள்ளதால் இந்த நிலை மாற்றம் போலும் - அனைத்தும் அய்யன் திருவிளையாடல்!

இங்கிருந்து தில்லைக்கு சென்று பின் திருவாரூர் ஐயனை தொழுதோம் மீண்டும் தில்லை கூத்தனின் திருவிளையாடலால் திருஅனிகலன் முழுவதும்  நீங்கிய முழுமையான செம்போன்மேனியை காணும் பேரு பெற்றோம் கலங்கிய கண்களுடன் -                       ஊமை கனாக்கண்டு உரைக்கரியா இன்பமதை எங்ஙனம் உரைப்பது அய்யனே

திருவாரூர்  அரசே போற்றி, தில்லையின் திருவே
திருமெய்ஞான ஒளியே போற்றி! போற்றி!
திருமீயச்சூர் அழகே போற்றி!